திருவள்ளுவர் தின சிறப்பு கவிதை
📜📜📜📜📜📜📜📜📜📜📜
*திருவள்ளுவர் தின*
*சிறப்பு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
*குமரேசன்*
📜📜📜📜📜📜📜📜📜📜📜
வள்ளுவர்.....
முகவரி
தெரியாமல் போன
ஒரு கடிதம்...
வள்ளுவரின்
வாழ்க்கை வரலாறு
குருடர்கள் கையில்
அகப்பட்ட யானை.....
தமிழ் மார்பில்
சுரந்த
"முப்பால்"க்கு முன்னால்
எப்பாலும்
அப்பால்தான்.....
தமிழ் தாய்க்கு
இவரே
தலைமகன்.... !!!
ஓலைச்சுவடியில்
பாடசாலைக் கட்டியவர்...
இவருடைய தமிழ் குர(ல்)ள்
திரும்பிப் பார்க்க வைத்தது
இவ்வுலகத்தையே......!!
எழுத்தாணியால்
பனை ஓலையில்
இவர்
ஏற்படுத்திய "காயங்கள்"
மருந்தானது...
"பிள்ளைத்"தமிழ்
இவருடைய
முப்பாலைப் பருகியே
"வளர்ந்தது.....!!!"
"திருகுறள் புத்தகம் "
ஒரு விளக்கு
கையில் இருந்தால்
"இருள்" என்பதே இல்லை.....!!!
ஒவ்வொரு குரளும்
ஒரு கடல்
அதில் மூழ்கின்றவர்கள்
" ஒரு முத்தோடு " வருவார்கள்.....
வார்த்தைக்குள்
அர்த்தத்தை வைப்பார்கள்...
இவர்தான்
அகராதியையே
வைத்திருக்கிறார்.....!!
"அதிகாரத்தால்"
எல்லோரும்
"குனிய" வைத்தார்கள்...!!
இவர் தான்
"நிமிர" வைத்தார்...!!
பாக்களை வைத்துக்
கட்டிய பாமாலை
இவர் படைப்பு....
கன்னியாகுமரி கடலில்
கலங்கரை விளக்காய்
வள்ளுவர்
நின்று கொண்டிருக்கிறார்....
வருகின்ற கப்பலுக்கு
வழிகாட்ட அல்ல
"உலகத்திற்கே
தமிழ்மொழியின்
சிறப்பைக் காட்ட.....!!!"
ஒரு இந்துவாக வேண்டுமா?
கீதை படி....
கிறிஸ்டினாக வேண்டுமா?
பைப்பில் படி.....
முஸ்லிமாக வேண்டுமா?
குர்ஆன் படி
மனிதனாக வேண்டுமா? "திருக்குறளை"ப் படி....
*திருவள்ளுவர் தின*
*வாழ்த்துகள்* 💐💐💐💐💐💐
*கவிதை ரசிகன் குமரேசன்*
📜📜📜📜📜📜📜📜📜📜📜