நினைப்பதெல்லாம நடந்து விட்டால்
நினைவுக்கும் பெரும்
வலிமை உண்டு/
நடத்தி முடி அதனைச்
செயலாய்க் கொட்டு/
கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/
முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/
சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/
மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம்
மறந்திடும் என்றும்/