இசை

சொற்ப வேளையிலும்
இன்பம் கொடுக்கும்/
உடைந்த உள்ளத்திற்கு
மருந்தாய் இருக்கும்/

செவிப்பறையை
தன் வசம் இழுக்கும்/
நடுங்கிடும் உடலும்
குலுங்கிட வைக்கும்/

தன்னை மறந்து
தாளமிடச் செய்யும் /
தாலாட்டின் வடிவில்
உறக்கத்தை அழைக்கும்/

இடத்திக்கு ஏற்றவாறு
இசையும் மாறும்/
இசையே அந்நிகழ்வின்
தன்மையைக் கூறும் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:17 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : isai
பார்வை : 56

மேலே