பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்

வண்டுக்குத் தேன்
சுரக்காத இதழ்கள் /
பூச்செண்டுக்கும் பொறாமை
மூட்டும் வதனம் /

உதிரிப் பூக்களும்
முகம் திருப்பும் /
உறவாட வரும்
தேனீரும் வியக்கும் /

இவள் பூவுக்கும்
பூவரசியோ இல்லை/
ஊர்ந்திடும் பூநாகம்
தீண்டிடாத பேரரசியோ?

பனித்துளி தொட்டு
மலர்ந்த மொட்டா?
பருவம் கண்டு
விரிந்த மொட்டா?

பூப் பறிக்க வரும்
புயலும் திகைக்குமே/
பூவாசம் சுமந்து
செல்ல மறக்குமே/

பெண் அழகு
கண்ட வண்ண /
மலரும் பொறாமையில்
நாணி சருகாகிடிடுமே/

காமக் கவிதைகளை
கவிஞனுக்கு அளிக்கும்/
காமதேனு பூவை
இவள் தானோ?

பூவோடு பூவாகி
மலர்ந்தாளோ பூவையிவள்/
பிரமன் படைப்பில்
ஓர் அதிசையமாய்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:11 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 115

மேலே