உன்னவனாய் மாறுவானோ

சித்திரை மாதந்தனில்
சிந்தையும் குளிர்ந்ததோ !
நித்திரைப் பொழுதினில்
நித்தமும் சொப்பனமோ !

கனவில்வந்த காதலனும்
கட்டியணைக்க வாரானோ !
தீட்டியுள்ள திட்டங்களும்
தீஞ்சுவையாய் இனிக்குமோ !

ஆலிங்கனம் புரிந்திடதான்
ஆழ்மனதும் துடிக்கிறதோ !
ஆறப்போட மனமின்றி
ஆசைகளும் கூடுகிறதோ !

தவித்திடும் உன்நெஞ்சம்
தணிந்ததும் துள்ளிடுமோ !
உறக்கத்தில் வந்தவனும்
உன்னவனாய் மாறுவானோ !

பழனி குமார்
09.05.2020

எழுதியவர் : பழனி குமார் (9-May-20, 1:54 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 345

மேலே