தோழனின் காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை வருமா

நண்பனே !
பல ஜென்மங்கள் வாழ்ந்த மயக்கம் !
உன் விழியை
நான் ஊடுறுவி சென்ற போது:
உன் விழியில் விழுந்த நொடி !
மறந்து விட்டேன் என்னை !
அன்பே !
உன் கண் என்ன காந்தமோ !
உன் கருவிழியை கண்டால் !
கவிதை கூட வர மறுக்கிறது !
என் நாணம் !
சூரியனை கண்ட பனித்துளி போல மறைக்கிறது :
கனவில் கூட அலைகிறேன் :
உன் கண்விழியை காண
நிஜத்தில் உன்னை பார்த்தால் !
என் நினைவிழுந்து நிற்கிறேன் கனவேன்று.......
நீ தந்த மாற்றம் !
கணிதம் தேற்றம் போல் நீண்டு கொண்டே செல்கிறது :
உன் நினைவால் !
மாற்றத்தை தந்துவிட்டு
எங்கு சென்று விட்டாய் என்னவனே !
காத்திருப்பேன்
கற்பனையை மெருகூட்டும் கவிஞனை போல !
உன் தோழியாக அல்ல !
என் இதயசிறையில் :
உன்னை சிறைவைக்க விரும்புகிறேன் :
"உன் காதலியாக" !

எழுதியவர் : Poomani (9-May-20, 1:16 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : un kathali
பார்வை : 124

மேலே