திறக்கப்படுகிறது

அரசன் :
வணக்கம் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்
அரசபைக்கு அரசன் நானே வந்துவிட்டேன் இந்த அமைச்சரை இன்னமும் காணோம்
போன் பான்னுவோம்
எந்தப் பெண்களிடம் உல்லாசமா இருக்கிறறோ
Where are you
மறு முனையில் அமைச்சர்
Who are you
அரசன் :
மன்னன் பேசுகிறேன்
அமைச்சர்:
மண்ணெண்ணெய்யா இருந்தால் என்ன விளக்கெண்ணெய் இருந்தால் என்ன
வையுங்கள் போனை
அரசன்:
அமைச்சரே நான் அரசன் பேசுகிறேன்
அமைச்சர்:
16 ரூபாய் பளபளப்பு துவைத்தல் கிளுகிளுப்பு
அரசன் :
அமைச்சரே உன்னை வேறு வழியில் தான் அழைக்க வேண்டும்
அமைச்சரே அமைச்சரே மன்னன் அந்தப்புரத்தில் இல்லவே இல்லை
அமைச்சர் :
மன்னன் அந்தப்புரத்தில் இல்லையா ஆஹா ஆ அந்தப்புரம் எந்தப்புறத்திலும்
நாம் ஆட்சி தான்
அரசன் :
அமைச்சரே உனக்கு இருக்கு வாருங்கள்
( பெண் வேடத்தில் மன்னன் அந்தப்புரத்தில்)
அமைச்சர்:
ஆஹா அரசரை காணோம் அந்தப்புர பெண்களிடம் கொஞ்சி குழவி விளையாட வேண்டியது தான்
ஆஹா இது என்ன அந்தப்புரத்தில் புது இறக்குமதியாக இருக்கிறதோ அரசர் சுவைக்கும் முன் நாம் சுவைக்க வேண்டியது தான்
அரசன்:
அமைச்சரே உனக்கு இவ்வளவு ஆசையா
( பெண் வேடத்தில் )
அமைச்சர் :
ஐயோ கால இது தேக்கு மரம் போல் உள்ளது ,
என்ன இடை என்ன இடை
இடையின் வளைவு வங்காள விரிகுடா போல் உள்ளது
நடைக்கு இந்த நாட்டையா எழுதி வைக்கலாமே
அரசன் :
பெண் வேடத்தில் அது உங்கள் அரசர் பேரில் இருக்கிறதோ
அமைச்சர் :
அவன் கிடக்கிறான் நான் சொன்னால் அவன் நாய்க் குட்டி போல் என்னையா சுற்றிச் சுற்றி வருவான், ஆம் அந்தப்புரத்தில் இந்தழகியின் பெயர் என்ன ஓ
அரசன் :
மதுகை
அமைச்சர் :
ஆஹா மது மாது சூது உன் பேருலைய இவ்வளவு போதையாக இருக்கிறதோ உன் விழிகள் எப்படி இருக்கும் ஆம் மீண்டும் ஒரு முறை தாங்கள் பெயரைக் கூறுங்கள்
அரசன் :
பெண் உடல் அமைப்பில் மதுகை என்ற நாலினத்தேடு
அமைச்சர் :
இது என் அரசன் பெயர் போல இருக்கிறதே
அரசன்:
அரசன் பெயர் போல அல்ல உன் அரசனே தான் அமைச்சரே
( பெண் வேடத்தை கலைக்கிறார் )
அமைச்சர் :
அரசே அரசே நீங்கள் எங்கே இந்தப் பக்கம்
அரசன் :
அமைச்சரே உங்களைப் பிடிக்க தான் அது என்ன நான் நாய்க் குட்டி போல வா உன் பின்னடியே சுத்துவேன
அமைச்சர் :
யார் சொன்னது அரசே செல்லுங்கள் அவன் தலையை கொய்துவிடுகிறேன்
அரசன் :
யார் தலையையும் இல்லை அமைச்சரே தாங்கள் தலையைத் தான்
அமைச்சர் :
அதை விடுங்கள் அரசே இப்போது நீதிநிலமை சரியில்லை நமக்கு வருவாயும் குறைந்துள்ளது அதற்கு வழி சொல்லுங்கள் அரசே
அரசன் :
அமைச்சரே நாமா என்ன என்ன வரி வாங்குகிறோம்
அமைச்சர்:
சாலை வரி , தண்ணீர் வரி ,வீட்டு வரி ,விவசாய வரியான பல வரிகள் சுரண்டிக் கொண்டு தான் இருக்கிறோம் ஆனாலும் மன்னா நிலமைகள் மாறவில்லை என்ன செய்வது மன்னா
அரசன் :
அமைச்சரே அதுக்கு தான் ஒரு புது திட்டம் உள்ளது
அமைச்சர் :
என்ன திட்டம் மன்னா
அரசன்:
அக்கா பானம் ,முக்கா பானம் ,சேமா பானம் எனப் பல பானங்கள் உள்ளது அமைச்சரே
அமைச்சர்:
அதில் எப்படி வருவாய் கிடைக்கும் மன்னா
அரசன் :
மதியில்ல மனிதர்களிடம் மது விற்றல் என்ன
எது விற்றல் என்ன
அமைச்சர்:
அருமையானத் திட்டம் மன்னா அது மட்டும் இல்ல
இப்போது உள்ள பெண்களிடம் தாலிக் கொடிகள் உள்ளது அதுவும் தங்கத்தில் உள்ளது
அரசன்:
ஆம் அமைச்சரே அருமை நாளையில் இருந்து திறக்கப்படுகிறது
அக்கா பானம் முக்கா பான கடைகள் .....

நன்றிகள்
இக்கதை கற்பனையே
உங்களுடைய பொன்னான கருத்துகளை கூறுங்கள் ...
நன்றி வாழ்க தமிழ்...

எழுதியவர் : சண்முகவேல் (24-Jan-19, 12:17 pm)
பார்வை : 216

மேலே