காதல் பிடித்தது
அவள் நிழல்கூட
வண்ணம் பூசிக்கொண்டதாய்
உணர்ந்தேன் அவளின்
அழகில் மயங்கிய நான்...
என் வாலிபம்
மழலையானது
அவளிடம் என் காதலை
சொன்னபோது...
உறக்கத்தை இரவல்
வாங்கினேன்
அவள் நினைவுகள்
அதை களவாடிக்கொண்டது...
புதிதாய் மீண்டும் பிறந்தேன்
அவள் என் காதலை
ஏற்றுக்கொண்டபோது...
இன்னும் நூறு வருடம்
ஆயுள் நீட்டிப்பு கேட்டேன்
இறைவனிடம்
அவள் கரம்பற்றி நான் நடந்தபோது...
என் வார்த்தைகளிலும்
புதுக்கவிதை ஒட்டிக்கொண்டது
அவளோடு பேசும் தருணங்களில்...
உலகம் என் உள்ளங்கையில்
அடங்கிவிட்டது
அவள் என் தோள் சாய்ந்தபோது...
.