போர்வைக் காடு

புது நிலவு தீயாய் எரிய
குழல் விரிந்து மேகமாய் கலைய
அங்கே ஒரு உளறல்
ஓசைகள் நீங்கும்
பாதை வழியே
அங்கே ஒரு அகவல்
சுவாசம் மேலிருந்து
கீழிறங்கி
வந்த வழி திரும்ப
திருப்பங்கள் முட்டிக் கொள்ள
சிலிர்த்துக் கொள்ளும்
மலரிதழ்கள்
விழி அகல
விழிக்குள் வலி அடங்க
கரத்தில் பிடி இறுக
அசையும் போதெல்லாம்
இசையுடன் முன்னோட்டம்
சிக்கிக் கொண்ட போர்வை தான்
அன்றில் நினைவில்
போராட்டம்
தாளம் போட்ட மழைத்துளி
தள்ளாட்டம்
மீண்டும் சீண்டல்
சொட்டும் இடமெங்கும்
சிராய்ப்பு தான் எஞ்சும்
இடைவெளி விட்டு
தொடர
நாளை மீண்டும் சீண்டல்
நாட்கள் தேய்ந்து போக
காட்டில் தீப்பற்றும்
அசைவுகள்
ஒடுங்கிக் கொள்ளும்
அழகான நரலல் கொஞ்சும்...

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (6-Feb-19, 11:27 pm)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
பார்வை : 145

மேலே