காதலர் தினம்
படிப்பறிவே இல்லாத முட்டாளும்
கவிதைகள் படைக்கும் பாவலர் தினம்
சொல்லாமல் இருக்கும் காதல் எல்லாம்
இன்று சேர்ந்து மகிழ வாழ்த்துக்கள்
சேர்ந்திருக்கும் உள்ளங்கள் இன்று
என்றும் சேர்ந்திருக்க்க வாழ்த்துக்கள்
ஒருதலை ராகம் பாடியவரெல்லாம்
ரெட்டை தாளம் போட வாழ்த்துக்கள்
ரோஜா பூவோடு அலைந்தவருக்கெல்லாம்
பூ போல காதலி அமைய வாழ்த்துக்கள்
சமூகத்தின் கட்டுப்பாட்டால் உடைய போகும் காதல்
உடையாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தவறான இடத்தில் கொட்டிய காதலெல்லாம்
சரியாக திரும்ப பெற வாழ்த்துக்கள்
புதுமணம் செய்த தம்பதியருக்கு
முதல் காதலர் தின வாழ்த்துக்கள்
புதியதாய் சேர்ந்த காதல் ஜோடிக்கு
விரைவில் திருமணம் நிகழ வாழ்த்துக்கள்