திரு முத்துக் குமார் அவர்களுக்கு அஞ்சலி

ஆனந்த யாழை மீட்டி, அழகு எதுவென்று காட்டி
அழகு தமிழில், ஆயிரம் பாடல்களை கடந்தாய்
அடுத்தடுத்த ஆண்டுகள் அரசின் அங்கீகாரம் பெற்று
அகவை ஐம்பதுக்குள் அரிய சாதனைகள் படைத்தாய்
முத்தமிழ் கற்று, முனைவர் பட்டம் பெற்று, வீர நடை போட்டு
நீ தொடங்கிய பயணம் பாதியில் தடைபட்டதே
மூப்படையும் முன், உன் மூச்சு நின்று விட்டதே
அய்யகோ, என்னே இத்தமிழுக்கு வந்த சோதனை
காலனே, உனக்கு கருணை இல்லையா?
செங்கோல் பிடித்த பல கறை படிந்த கைகள் இருக்கையில்
எழுத்தாணி பிடித்த கை எதற்கு?
கவிஞனுக்கு நீ கொடுக்கும் காலம் குறைவு தானா?
அன்று எங்கள் பாரதி, இன்று எங்கள் முத்துவா?

எழுதியவர் : சீ. பஞ்சாபகேசன் (15-Aug-16, 3:44 pm)
பார்வை : 379

மேலே