எம்எஸ்வி அவர்களுக்கு அஞ்சலி

ஸ்வரங்கள் எனும் விலங்கு பூட்டி, மெல்லிசை எனும் சங்கிலியால் கட்டி,
உள்ளம் எனும் சிறையில் அடைத்தாய்

கவிதை எனும் மலரோடு, இன்னிசை எனும் நூல் கோர்த்து
பாடல் எனும் மாலையாக்கினாய்

இசை மழையில் நனைந்திருந்தோம்
இன்பத்தில் மிதந்திருந்தோம்
இரங்கல் செய்தி கேட்டு இடிந்து போனோம்

கலைவாணி அழைத்தாளோ?
காலனுக்கு பொறுமை இல்லையோ?
கண் அயர்ந்து தூங்கினாயோ?
காற்றோடு கலந்தாயோ? என்று குழம்பி போனோம்

மெல்லிசை மன்னரே…………
உடலோடு ஒட்டி இருக்கும் குறுதி போல், உன் இசையோடு ஒட்டி இருக்கும் எங்கள் நெஞ்சம்
ஒங்குக நின் புகழ் இவ்வையமெல்லாம்….
-சீ.ப

எழுதியவர் : சி. பஞ்சாபகேசன் (16-Jul-15, 11:37 pm)
பார்வை : 221

மேலே