சுதந்திர காற்றை ஸ்வாசித்தோம்
நிலமும், நீரும், மலையுமாய் நீண்டு, அகண்டு விரிந்தாய்,
மதங்கள் பல கொண்டாய், மொழிகள் பல பேசினாய்,
பசியாற நெல்லும், நலம் வாழ பொன்னும் விளைவித்தாய்,
கலையும், கலாச்சாரமும் செழித்தோங்க, எட்டுத் திக்கும் எம் அன்னையின் புகழ் பரவியது.
சூழ்ச்சிக்காரர்களால், பல வருடங்கள் அடிமைப் பட்டாய்
உயிரும், குருதியும் கொடுத்து, வீர புதல்வர்களால் அடிமை விலங்கு அறுக்கப்பட்டது.
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினோம்.
உண்ண உணவு, உடுக்க உடை மட்டுமின்றி, உன் மடியில் படுத்து இளைப்பாற இடம் கொடுத்தாயே என் பாரதத் தாயே,
தெய்வ பக்தியும், தேச பக்தியும் எம் இரு கண்களாக பாவிப்போம்,
எங்கள் உயிர் மூச்சு இருக்கும் வரை உன்னை போற்றிப் பாதுகாப்போம் என்று இந்தியர் அனைவரும் உறுதி கூறுகிறோம்.
ஜெய் ஹிந்த்...