சுதந்திரத்தினை பேணிப்பாதுகாப்போம்

இச்சபையில்
நிறைந்துள்ள
அன்றோர்களுக்கும்
சான்றோர்களுக்கும்
வெங்கடேஸ்வரா
என்கின்ற
அறிவுக்கடலில்
ஏற்றம் பெற்று
வாழ்க்கையை என்கின்ற
கரையை
ஏறிட வந்துள்ள
என்னைப் போன்றோருக்கும்
75- வது விடுதலை பெருவிழா நன்னாளில்
மதிப்புமிகு
இனியதொரு
வணக்கத்தை
தெரிவித்துக் கொண்டு
நான் பேச வந்துள்ள
தலைப்போ
சுதந்திரத்தை பேணிக்காப்போம்!!

சுயநலப்போக்கில்
அடிமையாக்கி
அனைவரையும்
கொடுமைப்படுத்திய
ஆங்கிலேயரிடமிருந்து
தந்திரமாக பெறவில்லை
சுதந்திரம்!!

இம்சைகளை
தாங்கிய மக்களை........
காந்தியாரின்
அகிம்சை
என்கின்ற
ஆயுதத்தைக் கொண்டு
தொடர் போராட்டத்தின்
விளைவாக
பெறப்பட்டதே சுதந்திரம்!!

பெண்களின்
உள்ளத்தில்
விடுதலை வேட்கையை.....
பாரதியின்
எண்ணத்தில்
பாடல்களாக உருவெடுத்து
பாடப்பட்டு
உணர்வை தூண்டப்பட்டு
பெறப்பட்டதே சுதந்திரம்!!

யுத்த
களம் கண்டு
பல இன்னுயிர்களோடு
தன்னையும்
அற்பணித்திட்ட
சுபாஷ் சந்திரபோஸ்
அவர்களின்
ஆயுதங்களில்
சிதைந்திட்ட
உதிரத்தில்
எழுத்தப்பட்டது
நமது சுதந்திரம்!!

சமத்துவம் நிலைத்திட....
சரித்திரம் கண்டிட.........
அண்ணல்
அவர்கள்
எழுதிய
சட்டத்தால்
வென்றெடுத்ததே சுதந்திரம்!!

தென்முனையில்
ஆக்ரோஷமாக
கிளர்ச்சிப்பெற்று
வட முனை வரை
இடைவிடாத
தீப்பிளம்புகளாக
கதிர்விட்ட
போராட்ட களத்தினால்
வென்றெடுத்ததே
சுதந்திரம்!!

பல
ஆன்மாக்களால்
எழுத்தப்பட்ட
நம் சுதந்திரதத்தை
பேணுதலோடு
சமத்துவ பற்றோடு
ஏற்றத்தாழ்வுகளற்றவர்களாக
அனைவரும்
இணைந்து
பாதுகாப்போம்!!

மகிழ்வோடு........
நி.வ.விஷ்வதுளசி,
ஆறாம் வகுப்பு,
ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிகுலோஷன் மேனிலைப்பள்ளி,
பாப்பிரெட்டிப்பட்டி.

12/08/2022

எழுதியவர் : இரா.வசந்தகுமார் (15-Aug-22, 11:00 am)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே