விவசாயிகளின் தற்கொலை

விவசாயிகளின் தற்கொலை
ஏர் பிடித்தாய், நீர் இரைத்தாய். நிலத்தை
சீர் செய்தாய், செம்மையாக்கினாய்
பாடுபட்டாய், பயிர் செய்தாய். சேற்றில்,
கால் வைத்தாய், களை பறித்தாய்
சுற்றாரும், மற்றோரும் பசியாற,
சுடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும்,
பணி செய்தாய், பயிரை காத்தாய்.
கடன் பட்டாய், கவலையின்றி,
கடமையை செய்தாய்.
கதிர் அறுப்பாய், கதிரவனுக்கு நன்றி சொல்லி,
கட்டு, கட்டாக கடைவீதிக்கு சுமந்து செல்வாய்
கை நிறைய காசை நாடி, வயிறு மட்டுமே நிறைப்பாய் வாடி
நீ வளர்த்த நெல்லும், எள்ளும் உன் சிதைக்கு மட்டுமே மிஞ்சும்