அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

எழுத்துகளை சுமக்கும்
தாயென நா(தா)ட்கள்

எழுதினாலும் தீராத
இனி(மை) ஊற்றிய
என் பேனா

செவி நிரம்பும்
பண்ணிற்கு குரலிசைக்கும்
வானம்பாடியாய் மனம்

கரங்களுக்குப் பிடிபடாமல்
கண்களுக்குள் துள்ளி விழுந்து
கற்பனையில் வாழும் கனாக்கள்

எட்டி நின்றாலும்
காதோடு உரசிப்போகும்
மெல்லிய பூங்காற்று

பட்டாம் பூச்சிக்குப்
பரிசாய்ப் பிறந்திட்ட என்
பல வண்ணக் கவிதை

இதழ் சிந்திய
தேன் துளிகளில்
முத்துக் குளிக்கும்
பதின் பருவம்

இழப்புகளை நிறைத்திடும்
பேரன்பு கொண்ட
பெற்ற மனங்கள்

வீழ்ந்தாலும் பிரிக்க
நினையாத வாழ்வியலுடன்
கைகோர்த்த நட்பு விரல்கள்

சிரித்திடும் பொழுதுகளில்
சிலிர்த்திடும் பொற்கணங்கள்

காலடி சப்தத்தில்
மலர்ந்திட்ட ரோஜா
வனமொன்றில் நீள்கிறது
வாழ்க்கை அழகாய்
ஆனந்தமாய் !!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Aug-14, 9:23 pm)
பார்வை : 201

மேலே