அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
அறத்தில் வழுவா அருள்நெறி நாட்டமும்
பொற்புடை ஆக்கமும் பொன்றா விவேகமும்
கற்றவர் ஏத்தலும் கனவுகள் காண்டலும்
கற்பெனும் திண்மையும் கலப்பிலாக் காதலும்
வழுவிலா நோக்கும் வழுக்கிடா உறுதியும்
தருக்கிடாச் செருக்கும் தகையோர் போற்றலும்
குழந்தை உள்ளமும் குமுகாயச் சிந்தையும்
விழுமிய வேட்கையும் வித்தக வீர்யமும்
சழுக்கரைச் சாடும் சால்புடைத் துணிச்சலும்
ஒழுக்கம் பேணலும் ஒப்புர வொழுகலும்
செழுமை எண்ணமும் செயலில் நேர்மையும்
தழுவிடும் பாசமும் தகவோர் நேசமும்
அழுத்தம் விலக்கிடும் ஆற்றலும் அறிவும்
பழுத்த ஞானமும் பல்லுயிர் ஓம்பலும்
பழகுநல் நாநயம் பணிவுடன் சேர்ந்திட
அழகான வாழ்க்கை ஆனந்த மயமாமே