மகாபாரதம்
மகாபாரதம்
பார்த்தனுக்கு புகட்டிய பாடம் அல்லவா
இது கிருஷ்ணர் நடத்திய நாடகம் அல்லவா
வஞ்சனையால் வசியம் வைப்பர்
வரவேற்று விட்டு வழியில் வாழைப்பழ தோலையும் வைப்பர்
நெஞ்சனைத்தும் நேர்மை கொண்டும்
பச்சிளம் குழந்தை போல் பாசம் கொண்டும்
வழியில் விழி வைக்காமல்
குழியில் விழுந்தனரே- பாண்டுவின் புதல்வர்களே
பதறிப்போனான் பாண்டுரங்கன்
வாசுதேவனாய் வாசம் செய்து
விரோதிகளை நாசம் செய்தானே
தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தையும் ஆதரித்தானே
சூழ்ச்சியின் முடிச்சுகளை சூழ்ச்சியால் முறித்தானே
பாரத போர் முடிந்து பல யுகங்கள் கண்டது பாரதம்
இன்றும் பாண்டுவின் புதல்வர்களாய்
பரிதவிக்க பலர் இருந்தும்
பாண்டுரங்கனை மட்டும் காணவில்லையம்மா
துஷ்ட துரியன்கள் உயிர் குடித்தும்
இஷ்ட தெய்வம் மட்டும் இன்னும் வரவில்லையே!