தென்றல்

அசைந்தாடும் அழகியத் தென்றல் வந்து !
அழகியப் பெண்ணின் செவியில் நின்று !
அசரீரி போன்று ஒரு செய்தி சொன்னது !

வாழையும் மாவும் தென்றலுக்கு ஒன்றே !
ஏழையும் செல்வந்தனும் தென்றலுக்கு ஒன்றே !
வானமும் பூமியும் தென்றலுக்கு ஒன்றே !

பேதம் பார்த்துத் தென்றல் வீசுவதும் இல்லை !
மதம் பார்த்துத் தென்றல் விலகிப்போவதும் இல்லை !
மாதம் பார்த்துத் தென்றல் மறைவதும் இல்லை !

எங்கும் நிறைந்து நான் தண்மை தருகிறேன் !
பொங்கும் மனங்களில் ஆனந்தம் அளிக்கிறேன் !
ஏங்கும் இதயங்களை இதமாய்த் தொடுகிறேன் !

மெல்லிய மனங்களை வருடுகிறேன் !
செல்லத் தீண்டலால் இதம் தருகிறேன் !
மெல்ல வந்து மனம் கவர்கிறேன் !

மக்கள் மனதில் ஏன் இத்தனை பேதம் !
மாக்களும் கூட காட்டிடும் கோபம் !
பூக்களைப் போல வாழ்வோம் நாமும் !

தூது சொல்ல தென்றல் வந்தது !
சூது அழிக்க வழி சொன்னது !
கேடு காலம் இனி அழிந்தது !

தென்றலின் கூற்றைக் கேட்டு வியந்தேன் பேதை !
என்றுமே இதயங்களை வருடும் நீ ஒரு போதை !
என்றென்றும் பார் செழித்திடக் காட்டினாய் பாதை !


- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (23-May-15, 5:50 pm)
Tanglish : thendral
பார்வை : 2225

மேலே