குழந்தை

மழலை மொழிக்கு இணையும் உண்டோ !
மெல்லிய பூவிதழ் உன் பாதங்கள் அன்றோ !
கடவுளைப் பார்க்கும் கண்கள் உனக்கு !
கண்ணே நீ என் வாழ்வின் விளக்கு !

பட்டுக் கரங்கள் கொண்டு
தொட்டுத் தழுவினாய் இன்று
விட்டுப் பிரிதல் கண்டு
எட்டிப் பிடித்தாய் வந்து

தவழ்கின்றாய் மண்ணில்
கலந்திட்டாய் என்னில்
சிறைபிடித்தேன் கண்ணில்
எனைக் கண்டேன் உன்னில்

கொஞ்சும் உன் மொழி கேட்டு
கெஞ்சும் என் தாலாட்டு
சிங்கார நடை போட்டு
சிறு கரங்கள் நீட்டு

கண்களில் காந்தம் - உன்
கனிமொழியே என் வேதம்
நடை போடும் பாதம் - உன்
சயனங்கள் போதும்

நீ விளையாடும் அழகில் தோற்றது மயில்
நீ இளைப்பாறும் அழகுதான் எத்தனை எழில்
உன் சுந்தர நடையில் நாணியது மான்கள்
உன் கயல்விழி கண்டு ஏங்கியது மீன்கள்

இறைவன் தந்த வரமே - என்னை
இறுக அணைத்தாய் தினமே
மனக்கவலை போக்கும் உன் கரமே
மகிழ்வில் திளைத்தது என் மனமே

மகிழச் செய்தாய் என்னை
பல்லாண்டு ஆள்வாய் மண்ணை
என் உயிரில் கலந்த உன்னை
வெல்ல வைப்பேன் விண்ணை

- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (25-May-15, 5:10 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 1311

மேலே