ஆடை அவிழ் - அயிட்டம் பாட்டிற்கு ஆட வை - கற்குவேல் பா

பெண் என்று
தெரியுமின் ,
கருவிலே அழி !

மீறி பிறப்பின் ,
கள்ளிப்பால் கொடு !

மீறி வளர்மின் ,
கல்வியை தடு !

பூப்படைமின் ,
பாலியல்
துன்பம் கொடு !

படி தாண்டின் ,
ஏளனம் செய் !

பணிக்கு செல்லின் ,
பேருந்தில்
நெரிசலில் உரசு !

காதல் பெயரில் ,
காமம் தணி !

மணம் முடிக்க
வேண்டின் ,
தட்சணை கேள் !

மறுப்பின் ,
விவாகரத்து செய் !
விபசாரத்திற்கு இழு !

மீறி நிற்பின் ,
தாலி அறு !
தாசி பட்டம் கொடு !

மீறி வளர்மின் ,
ஆடை அவிழ் !
அயிட்டம் பாட்டிற்கு
ஆட வை !
அருகே அமர்ந்து
அண்ணார்ந்து பார் !

அவள்
உயிர் என்பதை மறந்து ,
உடலாக மட்டும் பார் !

அனைத்தும் செய் - பின்
கவி பாடு ,
பெண்கள்
நாட்டின் கண்கலென்று !!!

- கற்குவேல் . பா

*** (சாவதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தினம் )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (25-Nov-15, 11:42 am)
பார்வை : 408

மேலே