கண்மணி-வித்யா

கண்மணி-வித்யா

வெண்மேகம் கலைத்து
மின்மினிகள் குழைத்து
உன் நீல வானில்
நானெழுதிய கவி....

சந்திப்பிழைகளோ
மரபுப்பிழைகளோ
இக்கவியின் கெளரவம்
குறைக்கவியலாது

மூன்று புள்ளியோடு
முடியும் ஆச்சர்யக்குறியோ
முடிவோடு தொடரும்
முடிவிலியோ
இக்கவியின் அழகினைக்
கூட்டிட முடியாது

வெண்படலம் பிளந்து
உயிரொளி அடைத்து
இமைக்கதவு தாழிட்டு
பிறவியுருக்கி நானெழுதிய
இக்கவி.....
"என் கண்மணி கவி"

எழுதியவர் : வித்யா (24-Nov-15, 2:11 pm)
பார்வை : 166

மேலே