ரமேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ரமேஷ் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 04-Apr-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 182 |
புள்ளி | : 48 |
தமிழின் மீது காதல்...காதலின் மீது காதல்...
தவம் கிடக்கவில்லை
தனிமையை விலக்கிட ...
ஏனோ
அனிச்சை செயலாக
நிகழ்ந்திட்ட
அழகின் பரிமாணம் ...
புயல் ஓய்ந்த
அமைதியின் புரிதல்
புது உணர்வை
வித்திட்டுச் செல்லும்...
இன்னொரு பிறவியில்
இவள் வேண்டுமென
இமைக்காமல் தவிக்கின்றேன்
இரவு முழுவதும்....
உன்னையே நீ
ஏமாற்றிக்கொண்டு
நிஜங்களைத் தவிர்த்த
போலியின் முகத்திரைகள்
விலகாமல் பார்த்துக்கொண்டாய்...
என் மீது படர்ந்துள்ள
உந்தன் நிழலாக
என் கையில் உள்ள
காயங்களின் வடுக்கள்...
வாழ்க்கையை
நிர்மூலமாக்கிவிடும் சில
நிதர்சனங்கள்
உன்னுள் கேள்விகளின்
அணிவகுப்பாக...
உள்ளிருப்புகளில்
உண்மைகள்
உறைந்து கிடக்கும்...
வெளிச்சத்திற்கு
அப்பாற்பட்ட
உண்மைகளில்
இருள் படிந்திடினும்...
கண்களுக்குள்ளேயே
கரையாமல் இருக்கின்ற
கனவின் கடைசி நொடி...
ஒரு பேருந்து பயணத்தில்
கடந்து சென்ற ஏதோ ஒரு மரத்தில்
அமர்ந்திருந்த பறவை...
இதுபோல் எப்போதோ
ஒருமுறை வந்துபோவதில்லை
உன்னைப் பற்றிய நினைவுகள்...
Lost ur pen= no pen,
No pen= no notes,
No notes= no study,
No study= fail exams,
Fail exams=no diploma,
No diploma=no work,
No work=no money,
No money=no food,
No food=u get skinny,
U get skinny=no beauty,
No beauty=no love,
No love =no marriage,
No marriage=no children,
No children=loneliness,
Loneliness=depression,
Depression=sickness,
Sickness=death.......
Lesson: dnt lose ur pen u will die....... :
Lost ur pen= no pen,
No pen= no notes,
No notes= no study,
No study= fail exams,
Fail exams=no diploma,
No diploma=no work,
No work=no money,
No money=no food,
No food=u get skinny,
U get skinny=no beauty,
No beauty=no love,
No love =no marriage,
No marriage=no children,
No children=loneliness,
Loneliness=depression,
Depression=sickness,
Sickness=death.......
Lesson: dnt lose ur pen u will die....... :
என்றோ ஒருநாள்
வரம் கேட்டு
வேண்டியிருப்பேன் போலும்...
தேவதை ஒருத்தியைக் காண...
என் இலக்கிய பயணத்தின்
இலக்கணமானவள் நீ...
எனக்குள்
இன்றியமையாதவளாகிவிட்டவள்..
எனது இருண்ட வாழ்வின்
இருள் நீக்கி
இதிகாசமாய் மாற்றியவள்...
என் வாழ்வின்
இடைக்கால பேரரசி நீ....
வாசனையை வாங்கிக்கொள்ள
உன்னைத் தழுவி வரும் காற்றை
எதிர்நோக்கும் பூக்கள்....
என் மனதின் பாரம் மறைந்திடவும்
எதிர்காலம் பற்றிய
எண்ணங்கள் நிறைவேறிடவும்
கடவுளின் துணைவேண்டி
கண் மூடி நான் செய்த
தியானத்தின் இறுதியில்
என் எதிரில் நீ தோன்றுகிறாய்...
எனக்குப் புரிகின்றது...
கடவுளின் வழித்தோன்றலின்
கடைசியும் நீ தான் எ
பெண்களைக் கண்டால்
பெரும் அச்சம் கொள்கின்றேன்...
கண்ணீரிலும்
அழகிலும்
வீழ்த்தி விடுகின்றனர்...
அவர்களின்
பேச்சுக்களைக் கேட்பதால்
சர்க்கரை நோய் வருமளவுக்கு
இனிமையாய் இருப்பினும்
கோபத்தில் காரமே
கொப்பளிக்கும் என்பது
புளித்துப்போன
விஷயம் என்றாலும்
அவர்களுடன் பேசுவதற்கு
என்றுமே கசக்காது...
ஆனால் ஒரு
துவர்ப்பான செய்தி என்னவெனில்
அவர்கள் இல்லாத வாழ்க்கையில்
உப்புசப்பு இருக்காது...
நீயும் பெண்
என்பதால் தான்
அச்சம் வருகின்றது...
நான் விதைத்த
விதையில்
வேர்விட்டு வளர்ந்த
செடி ஒன்றில்
பூத்திட்ட பூவின்
அழகினை
நிதம் ரசித்து
வாசனையை
நுகர்ந்து கொண்டாடும்
நான்...
அந்தப் பூ
வாடியப்பின்
மறந்தது ஏன்
என்பது தெரியவில்லை...
நண்பர்கள் (15)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

ப சண்முகவேல்
தருமபுரி, காமலாபுரம்

செ செல்வமணி செந்தில்
சென்னை

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
