தீபா செண்பகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தீபா செண்பகம்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  04-Aug-1978
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-May-2015
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  8

என் படைப்புகள்
தீபா செண்பகம் செய்திகள்
தீபா செண்பகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 9:07 pm

லிமரைக்கூ
இது மூன்று அடிகள் கொண்டும் ஒன்று மற்றும் மூன்றாம் அடியில் கடை அசை எதுகை,மோனையுடன் அமைக்கப்படும்.இதில் சில முயற்சி.

1.வானில் வளரும் பிறை
முழுதாய் நிறைந்து மின்னும் வேளை
மீண்டும் தேய்வதே குறை
**********************************************************************************
2.மணம் நிறைந்த இஞ்சி
இதன் சாரம் எடுத்து பருகினால்
பித்தம் ஓடும் அஞ்சி
**********************************************************************************
3.இளம்நரையுடன் மறைந்த தந்தை
இல்லாத இருப்பினால் காட்டிச் சென்றார்
இறைவனே என்றும் எந்தை

மேலும்

நன்று 07-Jul-2015 3:04 am
நல்ல முயற்சி அதற்கேற்ற பலன் கவிதையில் நிறைவு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 1:19 am
அனைத்தும் நன்று புதுமையான வரிகள் நல்ல வளமான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 11:32 pm
நன்று. 06-Jul-2015 10:17 pm
தீபா செண்பகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 9:01 pm

ஆறே அறிவு
ஒண்ணு முதல் ஆறு அறிவு வரை
ஒவ்வொரு அறிவாய் உயிர்க்கு சேர்த்து
பரிணாமம் வளர்ச்சி தந்த பரமன்
ஆறாம் அறிவாய் சிந்தையைத் தந்து
பரிணாம வளர்ச்சிக்கு புள்ளி வைத்தார்
சிந்திக்கும் அறிவே சிறப்பு என
வரமும் சாபமும் ஆக்கமும் அழிவும்
மகிழ்வும் துக்கமும் வந்ததும் அதனால்
சிந்தையில் சிக்கி தவிக்கும் மனிதன்
அதை அடக்கி அகவழி கடந்து தம்மிடம்
தகுதி இருந்தால் வரட்டும்
என நினைத்தார் போலும்

மேலும்

நல்ல கவிதை... நல்ல கருத்து... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 1:18 am
தீபா செண்பகம் - தீபா செண்பகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2015 7:53 pm

யோசனை
அரங்கேற காத்திருக்கும்
ஆயிரம் யோசனைகள்
தருணம் கிடைக்காமல்
தவறியவை பல
செயல் திறன் குறைவால்
சிதறியவை சில
ஆகட்டும் பார்க்கலாம் என
காத்திருப்பில் சில,பல
செயல்பாட்டில் வந்து
சிறந்தவையாகவும் சில
சிந்தையில் உதிக்கும்
யோசனையே !
என்னுடையதாகவே இருக்கட்டும்
தவறுகள், அதற்காய்
கோபம் கொண்டு எனை விடுத்து
அகன்று விடாதே !
நீ இல்லாத நான்
ஜடமாய் ஆவேன் !

மேலும்

இந்தக் கவிதையும் தங்கள் யோசனையின் உச்சம் எனக்கொள்கின்றேன்... நன்று... வாழ்த்துக்கள்... 10-Jul-2015 11:52 am
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே! 06-Jul-2015 8:58 pm
வாழ்கையின் யோசனை வரிகளின் வாசனை அழகு... உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 12:48 am
மிக அருமை...... செய்யாத தவறுக்கு நீ கொடுக்கும் ஒவ்வொரு தண்டனையும் என்னில் உண்டான உயிர் வலியை நீயும் ஒருநாள் உணர்வாயானால் அன்றே என்னில் நீ காட்டிய அன்பும் நட்பும் உண்மையாகும்...... 05-Jul-2015 10:31 pm
தீபா செண்பகம் - தீபா செண்பகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2015 11:48 pm

தூக்கணாங்குருவி கூடு
கவின் மிகு கலைஞன்
சிறந்த வடிவமைப்பாளன்
தேர்ந்த நெசவாளன்
ஆற்றல் மிகுந்தவன்
தூக்கணாங்குருவி

முள் நிறைந்த மரம்
முதிர்ந்த சுரைக்காய்
சாத்தியமோ என நோக்க
அது ஒரு பறவை கூடு
கிளையில் தொங்கும்
வாசல் வைத்த வீடு

குழல் போல் உருண்டு
பந்து போல் பருத்தது
அடியில் இரண்டு வாசல்
உள்ளே எட்டிப் பார்க்க
பகுதியாய் பிரித்த அறைகள்
வலையால் ஆனா தரை அவை
முட்டை தாங்கி நிற்கும் சிறை

நாரில் பின்னிய மாளிகை
முழுதாய் ஒரு முழ உயரம்
கலவி மனம் புரியவென
ஆயத்தம் ஆனது கூடு
ஜோடி கிடைத்தவுடன்
ஆண் பறவை கட்டும்
அழகிய மாளிகை இது

அரை ஆயிரம் முறை
அலையுமாம்

மேலும்

நண்பர்களின் கருத்துக்கு மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி. 06-Jul-2015 8:55 pm
மிக அருமை நட்பே 27-Jun-2015 11:15 am
அருமை அருமை .... வார்த்தைகளும் அதில் தவழ்ந்த தகவல்களும் .. வாழ்த்துக்கள் கவியே !!. தூக்கணாங்குருவி கூடு ... கண்களில் காண முடியாமல் போனது அரிதாய் .. ஆனாலும் கவிதைகளில் என்றைக்கும் அதற்கு தனி சிறப்பு .. இத்தனை இடருகளை மனிதனால் கண்டும் , மரம் இழந்தும் , அவை மறக்கவில்லை தன் இனத்தின் தனி கலையை .. மனிதர்களை போல மரபை மறந்து விடாமல் , தங்கள் முன்னோர் வழிநின்று வாழ்கின்றன .. இந்த அழகாகிய கவியை அளித்தமைக்கு நன்றிகள் பல .. 27-Jun-2015 12:27 am
குருவிக் கட்டும் கூட்டை இந்த காலத்தில் மனிதனால் கூட கட்ட முடியாது... அழகான கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:02 am
தீபா செண்பகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 8:52 pm

ஹைக்கூ சில முயற்சிகள்.

1*ஆறுவது சினமாம்
அடைக்காக்கப்பட்டது
ஆத்திரம் எனும் நெருப்பில்
*************************************
2*மனம் நொந்த மங்கைக்கு
வானரம் தந்த மாமருந்து
கணையாழி
*************************************
3*பக்குவமாய் பதியமிட்டு
வளர்த்த ரோஜா மலர்ந்தது
மாற்றான் தோட்டத்தில்
*************************************
4*புதுச் சட்டையில் புகுந்து
அடுத்த சட்டை மாற்றும் வரை
ஆயுள்
*************************************
5*வெகு நேரப் போராட்டம்
விரையமான செலவாணி
வீண் வாதம்

மேலும்

புதுமையான கவிதை நல்ல வளமான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 11:41 pm
அழகான முயற்சிதான் 06-Jul-2015 9:03 pm
தீபா செண்பகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 7:53 pm

யோசனை
அரங்கேற காத்திருக்கும்
ஆயிரம் யோசனைகள்
தருணம் கிடைக்காமல்
தவறியவை பல
செயல் திறன் குறைவால்
சிதறியவை சில
ஆகட்டும் பார்க்கலாம் என
காத்திருப்பில் சில,பல
செயல்பாட்டில் வந்து
சிறந்தவையாகவும் சில
சிந்தையில் உதிக்கும்
யோசனையே !
என்னுடையதாகவே இருக்கட்டும்
தவறுகள், அதற்காய்
கோபம் கொண்டு எனை விடுத்து
அகன்று விடாதே !
நீ இல்லாத நான்
ஜடமாய் ஆவேன் !

மேலும்

இந்தக் கவிதையும் தங்கள் யோசனையின் உச்சம் எனக்கொள்கின்றேன்... நன்று... வாழ்த்துக்கள்... 10-Jul-2015 11:52 am
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே! 06-Jul-2015 8:58 pm
வாழ்கையின் யோசனை வரிகளின் வாசனை அழகு... உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 12:48 am
மிக அருமை...... செய்யாத தவறுக்கு நீ கொடுக்கும் ஒவ்வொரு தண்டனையும் என்னில் உண்டான உயிர் வலியை நீயும் ஒருநாள் உணர்வாயானால் அன்றே என்னில் நீ காட்டிய அன்பும் நட்பும் உண்மையாகும்...... 05-Jul-2015 10:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ரமேஷ்

ரமேஷ்

திருப்பூர்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ரமேஷ்

ரமேஷ்

திருப்பூர்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ரமேஷ்

ரமேஷ்

திருப்பூர்
மேலே