ஹைக்கூ சில முயற்சிகள்

ஹைக்கூ சில முயற்சிகள்.

1*ஆறுவது சினமாம்
அடைக்காக்கப்பட்டது
ஆத்திரம் எனும் நெருப்பில்
*************************************
2*மனம் நொந்த மங்கைக்கு
வானரம் தந்த மாமருந்து
கணையாழி
*************************************
3*பக்குவமாய் பதியமிட்டு
வளர்த்த ரோஜா மலர்ந்தது
மாற்றான் தோட்டத்தில்
*************************************
4*புதுச் சட்டையில் புகுந்து
அடுத்த சட்டை மாற்றும் வரை
ஆயுள்
*************************************
5*வெகு நேரப் போராட்டம்
விரையமான செலவாணி
வீண் வாதம்

எழுதியவர் : தீபாசென்பகம் (6-Jul-15, 8:52 pm)
பார்வை : 172

மேலே