லிமரைக்கூ
லிமரைக்கூ
இது மூன்று அடிகள் கொண்டும் ஒன்று மற்றும் மூன்றாம் அடியில் கடை அசை எதுகை,மோனையுடன் அமைக்கப்படும்.இதில் சில முயற்சி.
1.வானில் வளரும் பிறை
முழுதாய் நிறைந்து மின்னும் வேளை
மீண்டும் தேய்வதே குறை
**********************************************************************************
2.மணம் நிறைந்த இஞ்சி
இதன் சாரம் எடுத்து பருகினால்
பித்தம் ஓடும் அஞ்சி
**********************************************************************************
3.இளம்நரையுடன் மறைந்த தந்தை
இல்லாத இருப்பினால் காட்டிச் சென்றார்
இறைவனே என்றும் எந்தை