ஆறே அறிவு
ஆறே அறிவு
ஒண்ணு முதல் ஆறு அறிவு வரை
ஒவ்வொரு அறிவாய் உயிர்க்கு சேர்த்து
பரிணாமம் வளர்ச்சி தந்த பரமன்
ஆறாம் அறிவாய் சிந்தையைத் தந்து
பரிணாம வளர்ச்சிக்கு புள்ளி வைத்தார்
சிந்திக்கும் அறிவே சிறப்பு என
வரமும் சாபமும் ஆக்கமும் அழிவும்
மகிழ்வும் துக்கமும் வந்ததும் அதனால்
சிந்தையில் சிக்கி தவிக்கும் மனிதன்
அதை அடக்கி அகவழி கடந்து தம்மிடம்
தகுதி இருந்தால் வரட்டும்
என நினைத்தார் போலும்