வேஸ்ட் வாழ்க்கை

வெட்டியா ஒரு வேஸ்ட்-U வாழ்க்கை
வீணா போகுது வேலைவெட்டி இல்லாம
விக்குறேன் நான் மானத்த டெய்லி வீட்டுல
திக்குறேன் பேச்சுல
மனசு கேக்கல
வாய்ப்ப தேடி தேடி நாளும் போகுது
வண்ண வண்ண கனவெல்லாம்
காஞ்சு போகுது
வசதியா வாழ நினைச்சு மனசும் நோகுது....
வேலைய தேடுறேன் வாழ்க்கைய மறக்குறேன்
சுமை தான் கூடுது சுகமும் மறக்குது
ஏட்டு படிப்பு எல்லாம் எகிறி ஓடுது
எட்டு வைக்க எட்டு வைக்க மனசும் திணறுது
கிடைச்ச வாய்ப்ப பிடிச்சேன்
அதுக்காக எப்பையும் நடிச்சேன்
நடிச்சு முடிச்சு பாத்தா மனசெல்லாம் வலிக்குது....
வேலைக்காடா பஞ்சம் என சொல்லுது பல நெஞ்சம்
சொல்லுற பல வாய்க்காக அஞ்சுது என் நெஞ்சம்....
சறுக்கி சறுக்கி விழுந்து
உடம்பெல்லாம் மருந்து
என்னிகாது சீக்கிரமா நிப்பெனடா எழுந்து.......

--------சாரு சரண் CJ

எழுதியவர் : சாரு சரண் CJ (6-Jul-15, 8:56 pm)
Tanglish : waste vaazhkkai
பார்வை : 847

மேலே