தூக்கணாங்குருவி கூடு

தூக்கணாங்குருவி கூடு
கவின் மிகு கலைஞன்
சிறந்த வடிவமைப்பாளன்
தேர்ந்த நெசவாளன்
ஆற்றல் மிகுந்தவன்
தூக்கணாங்குருவி

முள் நிறைந்த மரம்
முதிர்ந்த சுரைக்காய்
சாத்தியமோ என நோக்க
அது ஒரு பறவை கூடு
கிளையில் தொங்கும்
வாசல் வைத்த வீடு

குழல் போல் உருண்டு
பந்து போல் பருத்தது
அடியில் இரண்டு வாசல்
உள்ளே எட்டிப் பார்க்க
பகுதியாய் பிரித்த அறைகள்
வலையால் ஆனா தரை அவை
முட்டை தாங்கி நிற்கும் சிறை

நாரில் பின்னிய மாளிகை
முழுதாய் ஒரு முழ உயரம்
கலவி மனம் புரியவென
ஆயத்தம் ஆனது கூடு
ஜோடி கிடைத்தவுடன்
ஆண் பறவை கட்டும்
அழகிய மாளிகை இது

அரை ஆயிரம் முறை
அலையுமாம் இதை கட்ட
ஒரு அடிநீளம் குறையா
வைக்கோல்,கோரை நார்
என பார்த்து பதம் பிரித்து
பாங்காய் கட்டிய கூடு
இரவில் ஒளி தரவென
களிமண் அப்பி அதில்
மின்மினியை பொருத்தும்

காற்றில் ஆடும் ஊஞ்சல்
எனவே புழுக்கம் இருக்காது
இத்தனையும் செய்த பின்னே
தன் பேடையை அழைத்து வந்து
ஒப்புதல் பெற காத்து நிற்கும்
தலைவி சில மாறுதல் செய்து
தலை அசைத்த பின்னே தான்
புதுமனை புகு விழா

எழுதியவர் : தீபாசென்பகம் (26-Jun-15, 11:48 pm)
பார்வை : 1818

மேலே