தனிமையில் இனிமை
வைரக் குவியலாய் நுரையோடும்
அலை கடல் என் பாதம் நனைக்க....
மெல்லிய இளம் தென்றல்
என் கழுத்தை கட்டிக் கொள்ள..
எங்கோ செல்லும் இளம் பெண்ணின்
மல்லிகை மொட்டுக்களின் மணம்
என் நாசி துளைக்க....
ஓடி விளையாடும் பிஞ்சுக் குழந்தைகளின் விரல்கள்
என் கரம் தட்டி செல்ல....
தங்க குவியலாய் மேற்கே மறைய செல்லும்
கதிரவனின் ஒளி என் விழிகள் கூசச் செய்ய....
எனது இந்த தனிமையிலும் ஒரு இனிமை!!
இந்த மாலை நேரக் கடற்கரையில்............