யோசனை

யோசனை
அரங்கேற காத்திருக்கும்
ஆயிரம் யோசனைகள்
தருணம் கிடைக்காமல்
தவறியவை பல
செயல் திறன் குறைவால்
சிதறியவை சில
ஆகட்டும் பார்க்கலாம் என
காத்திருப்பில் சில,பல
செயல்பாட்டில் வந்து
சிறந்தவையாகவும் சில
சிந்தையில் உதிக்கும்
யோசனையே !
என்னுடையதாகவே இருக்கட்டும்
தவறுகள், அதற்காய்
கோபம் கொண்டு எனை விடுத்து
அகன்று விடாதே !
நீ இல்லாத நான்
ஜடமாய் ஆவேன் !

எழுதியவர் : தீபாசென்பகம் (5-Jul-15, 7:53 pm)
Tanglish : yosanai
பார்வை : 335

புதிய படைப்புகள்

மேலே