முட்கிரீடம் தேடும் பூமி 555

என்னவளே...

நம் உயிர் காதலுக்கு இங்கு
இல்லமில்லை நாம் வாழ...

பூமி ஒரே சமூகம் என்றால்
பூ தூவும்...

கலப்பு திருமணம் என்றால்
கலவரம் நிகழ்த்தும்...

நீ என்ன சாதி மதம் என்று
தெரியாமல் நானும்...

நான் என்ன சாதி மதம் என்று
தெரியாமல் நீயும் பழகினோம்...

காதலாக மாறிய இந்த உறவு
சேர்ந்து வாழ நினைக்கிறோம்...

உண்மை காதலை புறக்கணிக்கிறது
இந்த சமூகம்...

காதலர்களின் உயிரையும்
குடிக்கிறது...

மகுடம் சூடாமல் முட்கிரீடம்
தேடும் பூமி நமக்கு வேண்டாம்...

வேறு கிரகம்
காண்போம்...

இல்லை உயிர் துறந்து
காற்றில் கலப்போம்...

இன்னொரு காதல்
ஜோடிகளுக்கு சுவாசமாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jul-15, 6:07 pm)
பார்வை : 384

மேலே