அறுசுவைப் பெண்ணாக

பெண்களைக் கண்டால்
பெரும் அச்சம் கொள்கின்றேன்...

கண்ணீரிலும்
அழகிலும்
வீழ்த்தி விடுகின்றனர்...

அவர்களின்
பேச்சுக்களைக் கேட்பதால்
சர்க்கரை நோய் வருமளவுக்கு
இனிமையாய் இருப்பினும்
கோபத்தில் காரமே
கொப்பளிக்கும் என்பது
புளித்துப்போன
விஷயம் என்றாலும்
அவர்களுடன் பேசுவதற்கு
என்றுமே கசக்காது...
ஆனால் ஒரு
துவர்ப்பான செய்தி என்னவெனில்
அவர்கள் இல்லாத வாழ்க்கையில்
உப்புசப்பு இருக்காது...

நீயும் பெண்
என்பதால் தான்
அச்சம் வருகின்றது...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (15-Jul-15, 1:11 pm)
பார்வை : 90

மேலே