இதோ இசை அழுகிறது

மெல்லிசை மன்னரே!
உன் மெல்லிசைவழி அறிவித்தாய்
மெய் வாழ்வு ..
உன் துள்ளிசைவழி கூட்டினாய்
மேல்நாட்டு இசைச்சுவை..
போரின் எல்லையிலும்
போய்சென்று வாசித்தவன் நீயல்லவோ..
நீராரும் கடலுடுத்த பாடும்
எத்தனை பேருக்கு தெரியும்
அதற்கு இசையமைத்தவன் நீயே என்று..
பாட்டுக்கு மூச்சு கொடுத்தவன்
அதை அகிலம் முழுக்க எடுத்துசெல்ல மறந்துவிட்டான்..
அதான் தேசிய விருதுகள்
இவன் காலடி புகாமல் அழுகின்றன..
நீ செய்த சாதனைக்கு பெற்ற விருது கொஞ்சம்
பஞ்சமில்லா மக்கள் அன்பனைத்தும்
உன் ஹார்மோனியம் வாசிக்கும் விரலில் தஞ்சம்..
கல்வி கற்கவில்லை நீ பள்ளிசென்று..
தந்தாயே பாட்டின்வழி வாழ்க்கைகல்வி அன்று..
மேகம் மூடி பகலவன் மறைந்திடுமோ
அதுபோலத்தான் உன் மரணமும்..
இமயத்தின் தடம் இல்லாமல் போயிடுமோ
அதுபோலத்தான் உன் புகழும்..
வாழ்கையில் வாரிசு தந்த நீ
உன் கலைக்கு யாரை வாரிசாக கூறுவாய்
இங்கே உன் மெல்லிசை மன்னர் மகுடம்
சூட ஆள் இல்லாமல் வெறுமையில் வாடுகிறது..
உன் உடல் காணா இசை உரக்க கத்துகிறது..
பரவாஇல்லை போய் வா!
கலைமகள் உன் கானம் கேட்க ஏங்குகிறாள் போலும்..
தகனம் உன் உடலுக்கு தான் கலைஞனே
இசை வாழும் வரை
உன் நினைவும் வாழும்..
தலைமுறை கடந்து இனித்த உன் பாடல்
இனி ஒலிக்கும் போதெல்லாம்
உன் நினைப்பும் இனிக்கும்..

எழுதியவர் : deeku (15-Jul-15, 1:33 pm)
பார்வை : 113

மேலே