இசையோடு இசையாக - எம்எஸ்வி

சூழ்நிலை -
மரணம்.
சுற்றி நிற்பவர் அனைவருக்குள்ளும்
மௌனம்....
எம்.எஸ்.வி மெல்ல எழுகிறார்
முகத்தில் திணறும் புன்னகை
ஆர்மோனியத்தில் கை வைக்கிறார்
திணறாத விரல்கள்....
மரணம் மௌனம்
இரண்டும்
இசையின் மொழியில்
மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது...
அகோரித்தனமான இரண்டும்
அவரது மெல்லிசையில்
அலாதியான ஒன்றாகிறது...
தற்சமயம்
திணறாமல் புன்னகைக்கிறார்....
ஒவ்வொருவர் இதயத்திலும்
இசை மெல்ல வேர்விடுகிறது....
கனத்த இதயங்கள்
சற்றே ஆசுவாசமாகிறது...
விழிகளில் கண்ணீர்
மெல்லிசையில்
மெல்ல கரைகிறது...
இசையின் பரிபூரணத்தில்
அவரும் ஒரு இசையாகிவிட்டார்...
ஆங்காங்கே
அவரின் ஆயிரமாயிரம் பாடல்கள்
இசைத்துக்கொண்டே.......