வலி
தேதி முடிவாகிவிட்டது
எண்ணி மூன்றே மாதங்களில்
இனி அலுவலகத்திலிருந்து
வீடு திரும்புகையில்
அந்த அலுப்பு இருக்காது
இனி அந்த தனிமை இருக்காது
என்மீது பாயும் அந்த
கோபமிருக்காது இனி..
சுடசுட தேனீர் குவளை
தயாராய் இருக்கும்
சமையலறையில் உணவு
சமைக்க அவளிருப்பாள்
பின்னாலிருந்து கட்டிப்பிடிக்க
அவனிருப்பான் ஆனால்
என்னையல்ல...
தலைவலி சளி தும்மல்
உடல்வலி சோர்வு அனைத்தைதும்
அக்கறையுடன் பார்க்கப்படும்
என்னைப்போல் பேச்சளவில்
மட்டுமில்லாமல்...
ஆ காட்டச் சொல்லி
இரவில் நிலாச்சோறு ஊட்டவும்
உடனமர்ந்து கதையும் பேசப்படும்
என்னைப் போன்றல்லாமல்
உண்மை சம்பவமாக...
இறுக கட்டிக்கொண்டு
கால்மேல் கால் போட்டுக் கொண்டு
கன்னத்தின் மேல் கன்னம் வைத்து
தூங்க அவளிலிருப்பாள்
என்னைப்போல் கற்பனையாக அல்ல
இன்றுவரை என்னிடமிருந்த
உன்னுடைய இந்த எதிர்ப்பார்ப்புகளெல்லாம்
நாளையோ நாளை மறுநாளோ
அவளிடம் திரும்பலாம்...
என் ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும்
இதுபோன்ற வரிகளில்
சுற்றித் திரிந்து கொண்டுதானிருக்கும்...