காதலி

என்றோ ஒருநாள்
வரம் கேட்டு
வேண்டியிருப்பேன் போலும்...
தேவதை ஒருத்தியைக் காண...

என் இலக்கிய பயணத்தின்
இலக்கணமானவள் நீ...

எனக்குள்
இன்றியமையாதவளாகிவிட்டவள்..

எனது இருண்ட வாழ்வின்
இருள் நீக்கி
இதிகாசமாய் மாற்றியவள்...

என் வாழ்வின்
இடைக்கால பேரரசி நீ....

வாசனையை வாங்கிக்கொள்ள
உன்னைத் தழுவி வரும் காற்றை
எதிர்நோக்கும் பூக்கள்....

என் மனதின் பாரம் மறைந்திடவும்
எதிர்காலம் பற்றிய
எண்ணங்கள் நிறைவேறிடவும்
கடவுளின் துணைவேண்டி
கண் மூடி நான் செய்த
தியானத்தின் இறுதியில்
என் எதிரில் நீ தோன்றுகிறாய்...
எனக்குப் புரிகின்றது...
கடவுளின் வழித்தோன்றலின்
கடைசியும் நீ தான் என்று...

என் இதய சிம்மாசனத்தில்
அமர வைப்பதற்காக - என்
உயிரணுக்களெல்லாம்
ஒன்று கூடி தேர்ந்தெடுத்த
ஒப்பற்றவள் நீ....

என்னை விழுங்கிச்செல்லும்
அந்தப் பார்வை...
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்...
உன்னைக் கண்ட பின்னால்
கனவு காண்பதும்
கவிதை எழுதுவதும்
எனக்குத் தொன்மரபாயிற்று...

உனது நினைவும்,
உனது அழகிற்கு
ஓரளவு நிகரான தமிழும்,
இந்த வேலையற்றவனின்
விரல்களுக்கு
விருந்தாக அமைகின்றது...

உன்னைப் பற்றி எழுதும்
பாக்கியம் கிடைத்தமைக்கு
சிறுவயதில் என் கை பிடித்து
தமிழ் எழுதக் கற்றுக் கொடுத்தவரை
நன்றியுடன் நினைக்கிறேன்...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (17-Jul-15, 11:25 am)
Tanglish : kathali
பார்வை : 135

மேலே