தெய்வத்தாய்

தெய்வத்தாய்
--------------------

இறைவன் உள்ளான்

என்று நம்புகின்றேன்

ஆனால் இறைவனை

இன்றளவும் நேரில்

கண்டேன் இல்லேன்




வானைக் கண்டேன்

விண் மீன்களைக் கண்டேன்

சூரிய சந்திரனையும் கண்டேன்

அந்தரத்தில் சுழலும்

தாரகைகள் கோள்கள்

இவை என்று தெளிவுபெற்றேன்


கடலைக் கண்டேன் -அக்

கடல் நீரின் சுவை அறிந்தேன்

கார்மேகம் கண்டேன் -அவை

தரும் மா மழையும் கண்டேன்



புள்ளினங்கள் பல கண்டேன்

அவற்றின் நிறங்கள் கண்டேன்

அவை தரும் இசையும் கேட்டேன்



மலர்கள் கண்டேன்

மலர்களிலே வண்ண வண்ண

பல நிறங்கள் கண்டேன் -அவற்றின்

மயக்கும் வசமும் நுகர்ந்தேன்


ஓடும் நதிகள் கண்டேன்

மா மலைகள் கண்டேன்

மலைக்க வைக்கும்

விலங்கினங்கள் அதனையும்

கண்டேன் கண்டேன்


மேவிய இவை எல்லாம்

படைப்பையும் படைத்தோனையும்

நினைப்பில் வைத்தன -எனினும்

என் இறைவனை மட்டும்

நேரில் என் கண்டேன்இல்லேன்

என்று நினைத்த வேளையில்


அங்கு என் தாயைக் கண்டேன்

அவள் பொழியும் அன்பில் திளைத்தேன்

அவள் கருணையைக் கண்டு வியந்தேன்

அவள் பொறுமையில் தாய்மையின்

முழுமைக் கண்டேன் -அந்த தாயின்

வடிவில் நான் காணா இறைவன்

உருவம் கண்டு கொண்டேனே .

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (17-Jul-15, 12:01 pm)
பார்வை : 125

மேலே