ஏதோ நிகழ்கிறது

தவம் கிடக்கவில்லை
தனிமையை விலக்கிட ...

ஏனோ
அனிச்சை செயலாக
நிகழ்ந்திட்ட
அழகின் பரிமாணம் ...

புயல் ஓய்ந்த
அமைதியின் புரிதல்
புது உணர்வை
வித்திட்டுச் செல்லும்...

இன்னொரு பிறவியில்
இவள் வேண்டுமென
இமைக்காமல் தவிக்கின்றேன்
இரவு முழுவதும்....

எழுதியவர் : ரமேஷ் (9-Jul-20, 3:07 pm)
சேர்த்தது : ரமேஷ்
Tanglish : yetho nigalkirathu
பார்வை : 179

மேலே