நிஜங்களின்போலிகள்

உன்னையே நீ
ஏமாற்றிக்கொண்டு
நிஜங்களைத் தவிர்த்த
போலியின் முகத்திரைகள்
விலகாமல் பார்த்துக்கொண்டாய்...

என் மீது படர்ந்துள்ள
உந்தன் நிழலாக
என் கையில் உள்ள
காயங்களின் வடுக்கள்...

வாழ்க்கையை
நிர்மூலமாக்கிவிடும் சில
நிதர்சனங்கள்
உன்னுள் கேள்விகளின்
அணிவகுப்பாக...

எழுதியவர் : நித்திலம்ரமேஷ் (26-Dec-17, 3:06 pm)
சேர்த்தது : ரமேஷ்
பார்வை : 80

மேலே