ஒத்தையடி பாதை

என்று தணியும்
என்
ஆன்மாவின்
கதறல் ,,,,

சுற்றம்
பல இருந்தும்

சுவாசிக்க
இயற்கை
தந்த
காற்று இருந்தும்

எண்ணிலடங்கா
கனவுகள்
இருந்தும்

கரம் தழுவ
காதல்
மலர்கள்
இருந்தும்

அமைதிப்படுத்தும்
நட்பு கூட்டம்
இருந்தும்

எதையும்
ஏற்க
துணியாமல்

இறுதியின்
முகவரி
தேடி

என்
ஆழ்மனம் ,,,,!

எழுதியவர் : தங்கதுரை (26-Dec-17, 3:40 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : othaiyati paathai
பார்வை : 315

மேலே