பெண்

இவ்வுலகினில் பெண்டிராய் பிறந்திடா
மாதவம் புரிதல் வேண்டும்..!
கற்பின் சிறப்பை வெளிக்கொணரா
மதுரை எரித்தவளும் பெண் தான்..!
உயிர் எழுத்துக் கொண்டு மனிதறம் பற்றி
ஏட்டினில் ஏற்றியவளும் பெண் தான்..!
விலைமாதர்கள் என விலைபேசி விற்ற
நிலை முற்றிழித்தவளும் பெண் தான்..!
பெண்ணியம் பேசிட வைத்த பாரதியைப்
பெற்று எடுத்தவளும் பெண் தான்..!
வானில் பூக்கும் விண்மீன்கள் பறிக்க
விண்ணில் கால்வைத்தவளும் பெண் தான்..!

பெண்மை போற்றுவோம்..!

எழுதியவர் : விஷ்ணு (26-Dec-17, 3:59 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : pen
பார்வை : 105

மேலே