மானுடம் மடியலாம் - காதலாரா

மானுடம் மடியலாம் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~

கொல்லும் வார்த்தைக்குள்
சில்லென சிதறும் நரம்பினை
செதுக்கி வளர்த்ததும் நீ ...

கோபத்தின் வேலிக்குள்
முள்ளென நழுவும் நாவினை
கடித்து துப்புவதும் நீ ...

விரக்தியின் ஆழத்தில்
எச்சமென பரவும் சோகத்தை
ஊற்றி நிறைப்பதும் நீ ..

பிழையின் மீதத்தில்
வாதமென அவிழும் சாபத்தை
உதறி எறிவதும் நீ ..

விலையற்ற நேரத்தில்
உச்சமென தொடரும் துரோகத்தை
நிரப்பி உடைப்பதும் நீ ...

நீயெனும்
நிறமற்ற உறவுகளே ....உம்
புரிதலில்லாப் புருவங்களுக்கு
புரிய வைக்கும் புலமையை விட ...

எம் யாக்கையின்
கரு நிழலும் எரிந்து ...
நிறை பழிக்குள் வழிந்து
சதை மொழியும் அழிந்து
சாம்பலின் விசும்பலின்
மானுடம் மடியலாம் ...

- காதலாரா

எழுதியவர் : காதலாரா (இராஜ்குமார்) (28-Nov-15, 5:29 am)
பார்வை : 225

மேலே