புதுவரவு -வித்யா

புதுவரவு-வித்யா

நிலவின் விருட்சங்கள்
தெளித்துவிட்ட ஒளிப்பூக்களில்
பட்டுத்தெரித்த பனித்துளித்தீண்டி
மோட்சம் கொண்டதொரு
உதயரேகை...!

மௌனம் கலைத்து
மழை சமைத்தது
மேகம்

எண்ணங்களுக்கு வண்ணம்
தீட்டிப் பிழை மறைத்தது
வானவில்

தேகம் தொட்டு
மோகம் கொண்டு
குடைவீசிப் போயிருந்தது
காற்று

புதுவரவுகளில்
கலைந்துப்போயிருந்தது
பழைய அரிதாரங்கள்

எழுதியவர் : வித்யா (8-May-15, 10:26 pm)
பார்வை : 337

மேலே