என் பயம்
சட்டங்கள் மாறுமெனில்
தீர்ப்புகள் மாறுமெனில்
தண்டனைகள் மாறுமெனில்
குற்றங்களை நிரூபிக்க வருடங்கள் ஆகுமெனில்
குற்றவாளியென தீர்ப்பளிக்கபட்டபின் ஜாமினில் வெளிவர வாய்ப்பிருக்குமெனில்
குற்றவாளிக்கு வாதாட வழக்கறிஞர்கள் கிடைக்குமெனில்
மனித நடவடிக்கைகளில் சரி எது தவறெது என முடிவெடுக்க வேண்டிய உரிமையும் கடமையும் சட்டத்தின் கையில் இருப்பது எனக்கு பயமளிக்கின்றது.
வழக்குகளின் ஆரம்பம் குற்றங்கள்
அவை முடியாததின் காரணம் சட்டத்தின் சிக்கல்கள்