செயல்முறை கல்வி
![](https://eluthu.com/images/loading.gif)
மருத்துவமும் சமையல்
துறைகளும் நேரடி செயல்முறை
கல்வியை மாணவர்களுக்குள்
புகுத்த..
பொறியியல் மட்டும்
ஏட்டுச் சுரக்காயாய்,
அறைகளுக்குள் அடைக்கப்பட்ட
செயல்முறை கல்வியை
படித்த பலரும்
வேலையின்றி தவிக்க
கிடைக்கும் வேலைகளில்
பற்றிக் கொள்ளும்
பலரின் நிலையும்..
ஏமாற்ற வலிகள்
முழுமையான புரிதல்
இல்லாத படிப்பாய்
பொறியியல் மாறாமல்
பிரபல நிறுவனங்களின்
துணைகொண்டு பயிற்சியளித்து
படிக்கும் படிப்பினை
உணர்ந்து படிக்கும்
தருணத்தை பொறியியல்
கல்லூரிகள் செம்மைபடுத்தினால்
வீட்டுக்கொரு அறிஞர்
விரைவில் உதயமாவர்..
செயல்முறை கல்வியின்
மகத்துவம் மலரட்டும்
வருங்காலங்களில்...