வேலையில்லா பட்டதாரி

பட்டன்கள் சிதைந்து போன
நான்கைந்து மேற்சட்டை;
கருநீல வர்ணத்தில்
ஒரேயொரு காற்சட்டை;

போட்டாலும் தரை உரசும்
ஓரு சோடி சப்பாத்து;
இடுப்பிற்கோர் இடைப்பட்டி;
கழுத்திற்கொரு சிறு பட்டி;

பார்வைக்கு மட்டும் விருந்தளிக்கும்
பாடசாலை சான்றிதழ்கள்;
பல்கலைக்கு சென்றதனால்
பெயரின் பின் ஈரெழுத்து;

மட்டுமா என் சொத்துடமை?
நித்தம் என் வயிற்றில் வரும்,
பசி வலியும் என்னுடை தான்.......

எழுதியவர் : ஜனார்த்தன் (8-May-15, 7:50 pm)
பார்வை : 86

மேலே