மனிதத்துவம்
வானம் கூரை
பூமி இல்லம்
வெயில் தோழன்
தென்றல் தோழி
உருக்கிய உடல்
முறுக்கிய மீசை
சலனமற்ற பாவம்
கனிந்த தோற்றம்
மெலிந்த தேகம்
தெளிந்த பார்வை
பசித்து உணவு
தவித்து தண்ணீர்
அரிதாரம் எதுவும் இல்லாத
அவதாரம் எனக்கு கிடைக்காது
மேற்சொன்னவை
பெறமுடியுமா பார்க்கிறேன்
பெருமூச்சுடன் அயர்கிறேன்