உலகநாதபிள்ளை ஜனார்த்தன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : உலகநாதபிள்ளை ஜனார்த்தன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 12-Jul-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-May-2015 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 7 |
பொண்டாட்டியைப் போற்றுங்கடா! - அவா
புத்திகெட்ட பொம்பளையா
கத்திக்கிட்டே இருந்தாலும்
பொண்டாட்டியைப் போற்றுங்கடா!
உப்பள்ளித் தட்டினாலும்
உறைப்பள்ளிக் கொட்டினாலும்
அப்பளத்தை நொறுக்கிக்கிட்டே
அம்மாவை நினைச்சுக்கொங்கடா!
மயிர்கல்லு கிடந்தாலும்
மன்னிச்சு விடுங்கடா!
தயிர்விட்டுக் கலந்தடிச்சித்
தண்ணியைக் குடிங்கடா!
கடபுடான்னு இரைஞ்சாலும்
கார்ச்சத்தம் கேட்டாலும்
கடவுளை வேண்டிக்கிட்டே
கண்மூடிப் படுங்கடா!
தாறுமாறாப் பொருள்கிடக்கும்
தரையெல்லாம் பிசுபிசுக்கும்
ஏறுமாறா பேசாதீங்கடா!
எடுத்தெல்லாம் தொடைச்சிவைங்கடா!
விளக்குமாற்றைக் கையில் பிடிங்கடா!
விசுக்கென்று கூட்டி முடி
நல்ல நேரம்பார்த்து
ஜாதகம் பார்த்து...
நல்ல நேரம்பார்த்து
பெண் பார்த்து...
நல்ல நேரம்பார்த்து
தாலி கட்டி...
நல்ல நேரம்பார்த்து
முதலிரவை முடித்து...
நல்ல நேரம்பார்த்து
விருந்து வைத்து...
நல்ல நேரம்பார்த்து
தேனிலவு சுற்றி...
நல்ல நேரம்பார்த்து
அறுவைசிகிச்சையில் குழந்தைப் பெற்று...
.
.
.
.
.
விவாகரத்து கேட்டு
மனு அனுப்பும்போது
என்ன நேரமாக இருக்கும்?
அதிசயமாய்..இன்று
சுட்டெரிக்கும் அக்னியின்
இடையிலே ..
குளிர்வாய் அடை மழை..!
எங்கிருந்தோ நகர்ந்து வந்த
கருமேகக் கூட்டம்..
எனது ஊரில்..
இப்போது..
மாலை ஆறு மணிபோல்
தெரியும் வானம்
மதியம் ஒரு மணிக்கு!
மழையில் நனைந்தபடி
ஆச்சரியத்தில்
அசையாமல்
நட்ட நடு வீதியில்
நிற்கின்ற மாடு..
அசடோ..
..
நேற்று வரை
தகிக்கும் வெயிலை
கரித்துக் கொட்டிய நான்..
அபோதமாய் ..
ஒரு குடைக்குள்
புகுந்தபடி..
சே.. என்ன மழை..
என்று சொல்லிப்
போவதை பார்க்கின்ற ..
மாடு ..நினைக்கின்றது
இவன் .. அசடோ?
முப்பெருந்தேவி...
மூத்த சீ மாட்டி
முது கலைகள் யாவிற்கும்,
முழுமையதி பதி நீ...
சதுர்முகன் சக்தி நீ..
சகலகலை தேவி நீ..
சந்தமுடன் இசை தந்த
இசை யாழி(நீ)
பக்தி மிகு பண் தந்து,
சக்தி மிகு சொல் தந்து,
பைந்தமிழ் கவி தந்த,
பத்மாவதி..
வெண்மையுள் வெண்மை நீ..
தொன்மையின் தொன்மை நீ,
தன்மையால் உலகாளும்,
கலை வாணியே!!
நெஞ்சிலே நான் கொண்ட
எண்ணங்கள் மொழியூடு
சரமாரி வந்தருள அருள்
புரிகு வாய்......
கண்ணிலே தென்பட்ட
கொடுமைகள் யாவும் என்
வரிகளால் சுட்டு விட
வரமருள் வாய்.....
தாய், சொந்த மொழி, தர்மம்
தேசத்தின் நற்புகழை
எந்நாளும் என்னுள்ளம்
கவி பாட வை.......
சிறுமைகள் கண்டு
முப்பெருந்தேவி...
மூத்த சீ மாட்டி
முது கலைகள் யாவிற்கும்,
முழுமையதி பதி நீ...
சதுர்முகன் சக்தி நீ..
சகலகலை தேவி நீ..
சந்தமுடன் இசை தந்த
இசை யாழி(நீ)
பக்தி மிகு பண் தந்து,
சக்தி மிகு சொல் தந்து,
பைந்தமிழ் கவி தந்த,
பத்மாவதி..
வெண்மையுள் வெண்மை நீ..
தொன்மையின் தொன்மை நீ,
தன்மையால் உலகாளும்,
கலை வாணியே!!
நெஞ்சிலே நான் கொண்ட
எண்ணங்கள் மொழியூடு
சரமாரி வந்தருள அருள்
புரிகு வாய்......
கண்ணிலே தென்பட்ட
கொடுமைகள் யாவும் என்
வரிகளால் சுட்டு விட
வரமருள் வாய்.....
தாய், சொந்த மொழி, தர்மம்
தேசத்தின் நற்புகழை
எந்நாளும் என்னுள்ளம்
கவி பாட வை.......
சிறுமைகள் கண்டு
பிழைக்கத் தெரிந்தவன் எனுமிச்சொல்லின்,
பொழிப்புரை நீ யறியாயோ!!!!!
உழைத்துக் களைத்து உதிரம் சிந்தி,
சலித்து, சாயா வலிமை கொண்டான்..
மெய்மை மறைத்து, பொய்மை சமைத்து,
நடித்துப் பிழைக்கும் நுட்பமறியான்....
பிழைக்க மாட்டான் கேளீர்....
அகத்தின் வண்ணம் முகத்தில் படாமல்,
அமைப்பில் வனப்பை அமைத்து சமைத்து,
அகத்துள் விஷமும், புறத்தில் நயமும்,
உதட்டில் நகையுடன் நடித்துக் கதைப்பான்,
உழைப்பின் ரத்தம் உறிஞ்சிக் குடித்து,
களைத்துப் போனவன் கண்ணீராலே,
ஊனைக் கழுவி அவித்து சமைத்து,
களித்துச் சுவைக்கும் கபட தாரன்,
இவனே பிழைப்பான் இப்பொய்யுலகில்....
நரகின் நகலாய் விளங்கும் இங்கே,
“நடிகன்”
பட்டன்கள் சிதைந்து போன
நான்கைந்து மேற்சட்டை;
கருநீல வர்ணத்தில்
ஒரேயொரு காற்சட்டை;
போட்டாலும் தரை உரசும்
ஓரு சோடி சப்பாத்து;
இடுப்பிற்கோர் இடைப்பட்டி;
கழுத்திற்கொரு சிறு பட்டி;
பார்வைக்கு மட்டும் விருந்தளிக்கும்
பாடசாலை சான்றிதழ்கள்;
பல்கலைக்கு சென்றதனால்
பெயரின் பின் ஈரெழுத்து;
மட்டுமா என் சொத்துடமை?
நித்தம் என் வயிற்றில் வரும்,
பசி வலியும் என்னுடை தான்.......
கடலன்னை, நிலமகளை கருணையுடன்
தொடநினைத்து;
கதிரவனின் கடுவெப்பக் கதிரொளியால்
விண்ணடைந்து;
நிலமைந்தர் மானுடரை களிப்பிற்
குள்ளாக்கிய பின்;
கடல் மீண்டும் தொடுகின்ற
முறையிதுவோ????
பட்டன்கள் சிதைந்து போன
நான்கைந்து மேற்சட்டை;
கருநீல வர்ணத்தில்
ஒரேயொரு காற்சட்டை;
போட்டாலும் தரை உரசும்
ஓரு சோடி சப்பாத்து;
இடுப்பிற்கோர் இடைப்பட்டி;
கழுத்திற்கொரு சிறு பட்டி;
பார்வைக்கு மட்டும் விருந்தளிக்கும்
பாடசாலை சான்றிதழ்கள்;
பல்கலைக்கு சென்றதனால்
பெயரின் பின் ஈரெழுத்து;
மட்டுமா என் சொத்துடமை?
நித்தம் என் வயிற்றில் வரும்,
பசி வலியும் என்னுடை தான்.......
அறிவிழந்த மானுடர்கள்,
ஆன்மாவை அறியாமல் – படும்
இன்னல் கண்டெந்தன்
ஈசன் விடும் கண்ணீரோ??
இவர் பின்தொடர்பவர்கள் (25)
இவரை பின்தொடர்பவர்கள் (25)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
