அருள் செய்கு வாய்

முப்பெருந்தேவி...
மூத்த சீ மாட்டி
முது கலைகள் யாவிற்கும்,
முழுமையதி பதி நீ...

சதுர்முகன் சக்தி நீ..
சகலகலை தேவி நீ..
சந்தமுடன் இசை தந்த
இசை யாழி(நீ)

பக்தி மிகு பண் தந்து,
சக்தி மிகு சொல் தந்து,
பைந்தமிழ் கவி தந்த,
பத்மாவதி..

வெண்மையுள் வெண்மை நீ..
தொன்மையின் தொன்மை நீ,
தன்மையால் உலகாளும்,
கலை வாணியே!!

நெஞ்சிலே நான் கொண்ட
எண்ணங்கள் மொழியூடு
சரமாரி வந்தருள அருள்
புரிகு வாய்......

கண்ணிலே தென்பட்ட
கொடுமைகள் யாவும் என்
வரிகளால் சுட்டு விட
வரமருள் வாய்.....

தாய், சொந்த மொழி, தர்மம்
தேசத்தின் நற்புகழை
எந்நாளும் என்னுள்ளம்
கவி பாட வை.......

சிறுமைகள் கண்டு நான்
பொறுமையாய் நில்லாது,
சினம் கொண்டு எப்போதும்
பொங்கியெழ செய்....

பேரிடர் வந்தாலும்,
பெரிய துயர் வந்தாலும்,
கலங்காமல் என் மனதை
கல்லுறுதி செய்...

அச்சமே யில்லாது,
அகிலமெல் லாம் நானும்,
வீறு நடை போட்டு வர
வழி செய்கு வாய்....

மொத்தத்தில் வந்து என்
இரத்தத்தில் குடியேறி,
சித்தத்தை
அருள் செய்கு வாய்....

எழுதியவர் : ஜனார்த்தன் (13-May-15, 5:33 am)
பார்வை : 153

மேலே